கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டி 4 வழி பிரிவு சாலை முதல் சஜ்ஜலப்பட்டி பிரிவு ரோடு வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் குழியில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் போகும் போது மேடு பள்ளம் தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.