கோவை வெள்ளலூர் திருவாதிரை நகரில்(பேஸ்-3) தார்சாலை வசதி கிடையாது. சீராக குடிநீர் வினியோகிப்பது இல்லை. குப்பைகள் சேகரிக்கும் பணி முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் வாடகை வாகனங்கள் கூட வர மறுக்கின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.