தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்டது சின்ன முருக்கம்பட்டி. இந்த கிராமத்திற்கு கம்பைநல்லூரில் இருந்து ஒடசல்பட்டி செல்லும் சாலையில் முருகர் கோவில் வழியாக செல்லும் தார்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக விவசாயிகள், பொதுமக்கள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமான சாலை சீரமைக்கப்படுமா?