மதுரை சிம்மக்கல்லை அடுத்த யானைக்கல் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்களாக உள்ளது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். நகரின் முக்கிய சாலையாக விளங்கும் இச்சாலையை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.