ஆரணி ஆரணிப்பாளையம் பகுதியில் இருந்து பையூர் எம்.ஜி.ஆர். நகர் அருகில் உள்ள சாமந்தவாடி ஏரி பகுதிக்கு செல்லக்கூடிய கழிவுநீரை சுத்திகரிக்கும் பணிக்காக நகராட்சி சார்பில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக தினமும் செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.
-இளையராஜா, ஆரணி.