குழாய்களால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-09-20 18:51 GMT

ஆரணியை அடுத்த சாமந்தவாடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காக பெரிய அளவிலான குழாய்கள் புதைக்கப்பட உள்ளன. அதற்காக ஆரணி பெரியகடை வீதியில் பழைய போலீஸ் நிலையம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக குழாய்களை சாலையோரம் போட்டுள்ளனர். தினமும் அந்த வழியாக பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. குழாய்கள் சாலை வளைவில் கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இரவில் விபத்துக்குள்ளாகின்றனர். அந்தக் குழாய்களை ஓரமாக ஒதுக்கி போட வேண்டும்.

-மதிவாணன், ஆரணி. 

மேலும் செய்திகள்