வேலூர் சத்துவாச்சாரி-பிரம்மபுரம் சாலையில் இருந்து ரங்காபுரம் சம்பங்கி நகர் செல்லும் சாலையின் மையப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் தினமும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாதவன், வேலூர்.