சிமெண்டு சாலையில் விரிசல்

Update: 2026-09-20 19:23 GMT

சோளிங்கரை அடுத்த ஐபேடு பகுதியில் இருந்து வெங்கப்பட்டு கிராமத்துக்கு செல்லும் சாலையை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சேதம் அடைந்த சாலையை நிரந்தரத் தீர்வாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு ஓரிரு மாதங்களே ஆன நிலையில், தற்போது சாலையில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. அந்தச் சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சேதம் அடைந்த சாலையில் சிமெண்டு பால் கரைசல் ஊற்றி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்தீபன், ஐபேடு. 

மேலும் செய்திகள்