சரியாக மூடப்படாத பள்ளம்

Update: 2026-09-20 19:30 GMT

திமிரி பேரூராட்சியில் ஆரணி நெடுஞ்சாலையில் வண்டி மாடு கொட்டகை அருகிலும், பத்மநாப முதலி தெரு முனையிலும், குரு நாராயணன் மண்டபம் அருகிலும் சாலையில் குறுக்கே பள்ளம் தோண்டி நெடுஞ்சாலைத்துறை சார்பாக வேலை செய்தனர். ஆனால், அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. அந்த இடத்தில் பள்ளமாக காணப்படுகிறது. பள்ளத்தை சரியாக மூடி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன், திமிரி.

மேலும் செய்திகள்