திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே பேராம்பட்டு மண் குன்ற மலை மீது சென்னக்கேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் மலையில் அமைந்துள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சம்பத், விஷமங்கலம்.