ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பக்கிரிதக்கா ரெயில்வே தரைப்பாலம் செல்லும் சாலையில் கடந்த மாதம் தார் சாலை புதிதாகப் போடப்பட்டது. அந்தச் சாலை திடீரென சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. சேதமடைந்த சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.அருண்குமார். சந்தைக்கோடியூர்.