நாமக்கல் மாவட்டம் மாட்டுவேலம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அளவாய்மலை செல்லும் சாலை வழியில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.