திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்புச்சுவர் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மண் குவியல் கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் சாலை தடுப்புச்சுவர் ஓரம் கிடந்த மண் குவியலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் பணியாளர்கள் அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.