வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையல் கூடம் உள்ளது. அதன் முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் உடைக்கப்பட்ட தடுப்புக்கம்பியை வைத்துள்ளனர். இதனால் காலை உணவு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகுல், வேலூர்.