கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூரில் இருந்து கள்ளை வழியாக தேசியமங்கலம் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார்ச்சாலை வழியாக தினமும் திருச்சி மற்றும் அய்யர்மலைக்கு அரசு பஸ், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில் சின்னப்பனையூர் கடைவீதியில் இருந்து திரும்பும் வளைவு பகுதியின் குறுக்கே பல இடங்களில் சாலை பள்ளமாக உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லும் போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.