சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் உயர்நிலைப்பள்ளி முன்பாக வாறுகால் பாலம் சேதமடைந்து துவாரம் விழுந்து காணப்படுகிறது. அதில் தற்காலிகமாக ஜல்லி கற்கள், மண்ணை கொட்டி சீரமைத்தனர். எனினும் மழையில் மண் கரைந்ததால் ராட்சத குழியாக காட்சி அளிக்கிறது. மேலும் வாறுகால் பாலமும் தூர்ந்து விட்டது. இதனால் மழைக்காலத்தில் குளத்துக்குள் தண்ணீர் செல்லாமல், ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் பாலத்தை சீரமைத்து, வடிகாலையும் தூர்வார வேண்டுகிறேன்.