விக்கிரவாண்டி வட்டம் வெள்ளையாம்பட்டு கிராமத்தில் சாலை வசதி இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள மண்சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் கடும் அவதியடைந்த வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.