திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா மன்சுராபாத்-தேவிகாபுரம் சாலை, மன்சுராபாத்-மங்களம் சாலையோரங்களில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து சாலையில் தவழ்கிறது. இரு வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்கி செல்ல சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் வளர்ந்திருக்கும் செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா?
-எஸ்.ஜெய்சங்கர், மன்சுராபாத்புதூர்.