உடுமலை அருகே போடிப்பட்டி ஊராட்சியில் கழிவு நீரை வெளியேற்றும் வகையில், சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. சாலைகளை இணைக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட தரைமட்ட பாலம் சில இடங்களில் 2 அடி உயரத்துக்கு உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தரைமட்ட பாலத்தை சீரமைத்து பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
ரமேஷ், போடிப்பட்டி.