கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2026-08-09 19:02 GMT

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட மேகலப்பாடியில் இருந்து கீழ்அரசம்பட்டு கிராமத்துக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. அந்தச் சாலையில் தார் ஊற்றும் பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் பணியை தொடராமல் கிடப்பில் போட்டு விட்டார்கள். அந்த வழியாக சிறுவர், சிறுமிகள் பள்ளிக்கும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இனி காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் ஊற்றி சாலை அமைக்க முன்வர வேண்டும்.

-ஜெயகுமார், நஞ்சுகொண்டாபுரம். 

மேலும் செய்திகள்