சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அரசிராமணி மூலப்பாதையில் நான்கு சாலைகள் சந்திக்கிறது. இந்த இடத்தில் வளைவு சாலையில் தோன்றிய பள்ளத்தால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையின் வளைவு பகுதியில் காணப்படும் பள்ளத்தை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.