நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காணாம்பாளையம் குடித்தெரு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக பல ஆண்டுகளாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.