பேரணாம்பட்டு நகராட்சி அஜீஜியா வீதியில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் சிமெண்டு சாலை அமைக்க கடந்த 1½ மாதத்துக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஏற்கனவே உள்ள பழைய சாலையை அரசு விதி முறைகள் படி முழுவதுமாக அகற்றப்படாமல் தெருவில் பாதி பகுதி வரை தான் அகற்றிவிட்டு சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்டாற்று வெள்ளத்தால் வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்தனர். சாலையை அகற்றாமல் அதன் மீது சிமெண்டு சாலை அமைக்கப்பட்டால் வீடுகளுக்கு மேல் சாலை உயர்ந்து வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சேதம் ஏற்படும். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அதிகாரிகளிடம் பல முறையிட்டு மனுக்கள் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சமீர் அஹம்மத், பேரணாம்பட்டு.