பழுதான சாலையை சீரமைப்பார்களா?

Update: 2026-02-08 19:22 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர்நகர் பகுதியில் இருந்து மாலைமேடு பகுதிக்கு செல்லும் தார் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். அந்தச் சாலையை பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாணாவரம் பகுதியில் உள்ள மருத்துவமனை, ரெயில் நிலையம், வங்கி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன்நாதன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்