அன்னூரை அடுத்த கஞ்சப்பள்ளி நடுவீதியில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் வாகனம் மோதி அந்த மின்கம்பம் சேதம் அடைந்தால், மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றி சாலையோரம் நட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.