குண்டும் குழியுமான சாலை

Update: 2026-07-05 17:20 GMT
செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் குண்டும் குழியுமான சாலையை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்