வாலாஜாவை அடுத்த தகரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருங்கால் மேட்டில் இருந்து செங்காடு செல்லும் குறுக்கு சாலை சமீபத்தில் போடப்பட்டது. அதில் 200 அடி தூரம் சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். அந்த வழியாக நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வாலாஜா.