பாகூர் தொகுதி மதிகிருஷ்ணாபுரம் முதல் மூ.புதுக்குப்பம் வரை செல்லும் சாலையை சீரமைக்க பூமி பூஜை செய்யப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் சாலையில் கற்கள் பரவி கிடப்பதால் இரு சக்கரங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்தை தடுக்க சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.