அறச்சலூர் சில்லாங்காட்டுப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே சாலையின் நடுவே தடுப்புக்கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. வேகத்தை தடுப்பதற்கு பதிலாக வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே தடுப்புக்கம்பிகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.