திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டியில் இருந்து மைலாப்பூர் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக சாலை மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.