போக்குவரத்துக்கு இடையூறான பள்ளம்

Update: 2026-07-05 18:50 GMT

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் அமைந்துள்ள சமாதியான் குளத்தெருவில் புறவழிச்சாலை அமைக்கும்போது சாலையை உயர்த்தி செய்யாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சாலை இருபக்கமும் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிய சமாதியான் குளத்தெருவில் இருந்து கொடநகர் பகுதிக்கு செல்லும் சாலையை உடைத்து மழைநீரை வெளியேற்றினர். அந்தப் பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. பள்ளத்தை இன்னும் மூடாமல் வைத்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமரன், செய்யாறு.

மேலும் செய்திகள்