வேலூர் அருகே மேல் மொணவூரில் இருந்து அப்துல்லாபுரம் செல்லும் வழியில் பைபாஸ் சாலையோரத்தில் சரிவான பெரிய பள்ளம் உள்ளது. தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் செல்கின்றனர். விபரீதங்கள் நடக்காமல் தடுக்க, சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மகேஷ்குமார், வேலூர்.