பேரணாம்பட்டு புத்துக்கோவில் சந்திப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் சாலை தடுப்புச்சுவர் உள்ளது. அந்த வழியாக இரவில் வருவோருக்கு தடுப்புச்சுவர் இருப்பது சரியாக தெரியவில்லை. இதனால் வாகனங்களில் வருவோர் தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவில் தடுப்புச்சுவர் இருப்பதை அடையாளப்படுத்தி காண்பிக்க எதிரொலிப்பான் பலகை, விளக்கு ஆகியவற்றை பொருத்துவார்களா?
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.