சாலையோர கழிவுநீர் கால்வாய் பள்ளம்

Update: 2026-06-21 19:07 GMT

வாலாஜா-சித்தூர் செல்லும் எம்.பி.டி. சாலையில் அமுதம் கார்டன் எதிரில் சில ஆண்டுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக எடுக்கப்பட்ட பள்ளம் முழுமையாக மூடாமல் போட்டு விட்டனர். அந்தப் பள்ளம் 4 அடி ஆழம் கொண்டதாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே சாலையோர கழிவுநீர் கால்வாய் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகசுந்தரம், வாலாஜா. 

மேலும் செய்திகள்