சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தக்கான்குளம் பகுதியில் இருந்து பொன்னியம்மன் கோவில் வரை நடைபாதையில் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் அதற்காக, தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடாமல் உள்ளது. அதற்காக எடுக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களை அதிகாரிகள் முறையாக அமைப்பார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.