சாலைைய சீர் செய்வார்களா?

Update: 2022-09-04 14:52 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு சேலம் கூட்ரோடு அருகே பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் வங்கி அருகே உள்ள சாலை கழிவுநீர் வெளியே வந்து குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலை கவனிக்கப்படாமல் தடுப்புகள் வைக்கப்பட்டு அப்படியே உள்ளது. மாவட்டத்தின் தலைநகரிலேயே சாலைகள் இந்தக் கதியில் உள்ளது. இந்தச் சாலை புதிதாக போடப்பட்ட சாலை ஆகும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெடுஞ்சாலைத் துறையினர் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து, சாலையை சீர் செய்வார்கள?

-எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்