சாலையை சரி செய்வார்களா?

Update: 2022-07-09 16:17 GMT

சாலையை சரி செய்வார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கால் ஆண்டித்தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் தெருவுக்கு அருகில் உள்ள வேளாளர் தெருவில் சிமெண்டு சாலை அமைத்ததில் இருந்து ஆண்டித்தெரு முகப்பு பகுதி 5 ஆண்டுகளாக சரி செய்யாமல் உள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம், கிராம சபை கூட்டம் ஆகியவற்றில் வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டித் தெரு முகப்பில் சாலையைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-குமரவேல், கொடைக்கல். 

மேலும் செய்திகள்