சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-03-08 16:41 GMT
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பஸ் நிறுத்தம் முதல் தெத்துக்காடு வரை குடிநீர் குழாய் பதிக்க சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தும் சாலை சரிசெய்யப்படாததால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் கடும் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்