கொண்டசமுத்திரம்- டி.கொளத்தூர் இடையே தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.