பணியை விரைந்து முடிப்பார்களா?

Update: 2025-01-12 20:40 GMT

காட்பாடி கழிஞ்சூர் ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து பிரியும் காங்கேய நல்லூர் சாலை நடுவே பள்ளம் தோண்டி பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொண்டனர். அந்தப் பணியை 2 ஆண்டுக்கும்மேல் ‘ஜவ்வாக’ இழுத்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. பணியை விரைந்து முடித்து, சாலையில் தார் ஊற்றி சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருஷ்ணராஜ், காங்கேயநல்லூர்.

மேலும் செய்திகள்