வந்தவாசி ஐந்துகண் பாலத்தில் இருந்து சேத்துப்பட்டு சாலை கீழ்சாந்தமங்கலம் கூட்ரோடு வரை இருபக்கமும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையை சற்று விரிவுப்படுத்தினால் விபத்து தடுக்கப்படும். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ம.ம.பழனி, வந்தவாசி.