குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-03 09:14 GMT

காட்பாடி காந்திநகர் சில்க்மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர் அரசு சட்டக் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை மோசமான நிலையில் உள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மாணவ, மாணவிகள் தவறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பலதரப்பட்ட மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே இந்தச் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

-தினேஷ்குமார், காந்திநகர், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது