சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-03-15 09:47 GMT

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பாலவிநாயகர் நகருக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் சாலை இருப்பதே தெரியாத அளவிற்கு பெயர்ந்து கிடக்கிறது. அத்துடன் சாலையோரத்தில் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அந்த வழியாக சென்று வரும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்