திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர். இதன் 1-வது பிரதான சாலையின் நடுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை போடுவதற்கான வேலை தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி தற்போது வரை முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பெரிய பெரிய கற்கள் சாலையில் போடப்பட்டுள்ளதால் அந்த வழியாக நடந்த செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.