செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த அதனூர் வீராத்தாம்மன் கோவில் கருமுத்து தியாகராஜ நகரில் பல மாதங்களுக்கு முன்பு சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி ஏதும் மேற்கொள்ளவில்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மண்பாதையில் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த சாலை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.