கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் சிக்னல் அருகே பாரதி நகர் எதிரே உள்ள வளைவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் அங்குள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.