ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து கீரந்தை செல்லும் சாலையில் மருதகம் விலக்கில் இருந்து கீழப்பனையூர் வழியாக மேலப்பனையூர் செல்லும் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை பழங்குளம், மருதகம், கீழ்பனையயூர் உள்ளிட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.