சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் அதிக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் சில பகுதிகளில் சாலை இல்லாமல் மண் பாதையாக உள்ளன. மழைக்காலங்களில் மழைநீர் மக்கள் செல்லும் பாதைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.