ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தீஸ்வரமங்கலம் ஊராட்சியில் சுடுகாடு அமைந்துள்ளது. அங்கு செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையானது முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டிற்கு சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.