திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வாழ்க்கை பகுதியில் இருந்து வெள்ளமண்டபம் பகுதி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனியாக சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், சேங்கனூர்.